ஆம்பூர் அருகே முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்து - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஆம்பூர் அருகே முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்து

IMG-20250225-WA0458

ஆம்பூர் அருகே முன்னால் சென்றுக்கொண்டிருந்த  லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளான   கல்லூரி பேருந்து, அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி மாணவிகள்



திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள தனியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் வகுப்புகள் முடிந்து  கல்லூரி  மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து  ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது சோலூர் பகுதியில் உள்ள   பெங்களூர் - சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் ஓசூரிலிருந்து சென்னையிற்கு ஆயில் ஏற்றிச்சென்ற  லாரியின் பின்பக்கம் எதிர்பாராவிதமாக   கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது,  இதில் எவ்வித காயமின்றி கல்லூரி பேருந்து ஓட்டுநர் மற்றும், கல்லூரி மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நிலையில், இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்து மற்றும் லாரியை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.


 அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad