வேலூர், பிப் 5 -
வேலூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் ரோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். புதியதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ்என் நிரந்தரமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக