மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற்று தந்தவர் எடப்பாடியார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 பிப்ரவரி, 2025

மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற்று தந்தவர் எடப்பாடியார்

 

IMG_20250201_124400_821

மத்திய அரசை வலியுறுத்தி நிதியை பெற்று தந்தவர் எடப்பாடியார்


பிரதமரையும், மத்திய அமைச்சர்களை வைத்து  விழா நடத்தும் முதலமைச்சர் நிதியை பெற்றுத்தர ஒரு துரும்பை கூட தூக்கி போட முயற்சிக்கவில்லை.


இந்துக்களும் ,முஸ்லிம்களும் சகோதரராக  உள்ளார்கள் திருப்பரங்குன்றம் சர்ச்சையை கிளப்பி விட்ட யார் அந்த சார்? இதில் அரசு வேடிக்கை பார்த்து என்ன மறைமுக திட்டம் வைத்துள்ளது?

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.



சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியரை  நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கையை வைத்தார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது.


எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது ,திருமங்கலம் தொகுதியில் உள்ள செக்கானூரணி பேருந்து நிலையம் சீரமைப்பு செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர் அதனை தொடர்ந்து நான் கோரிக்கை வைத்த  அடிப்படையில், தற்போது 8 கோடியே,
50 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தற்போது பூமி பூஜை போடப்பட்டுள்ளது, இந்த பேருந்து நிலையத்திற்கு தென்மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்தவரும், கட்சத்தீவு பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்த மூக்கையா தேவரின் திருவுருவ சிலையை நுழைவு வாயிலில் அமைத்தும் ,அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு மூக்கையா தேவர் பெயரை சூட்ட வேண்டும்.


திருமங்கலம் ,ராஜபாளையம் ரோட்டில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது, இதில் ஆலம்பட்டி, சுப்புலாபுரம் தவிர மற்ற அனைத்து சாலைகளும் புறவழிச் சாலையில் இயங்குகிறது, இந்த ஆலம்பட்டி மற்றும் சுப்புலாபுரம் பகுதியில் ஊருக்குள் வருகிறது அதனால் மக்கள் கோரிக்கையை ஏற்று அணுகு சாலை மற்றும் சுரங்கப்பாதை அமைத்திட வேண்டுமென்று மக்கள் போராட்டம் செய்தனர், அதில் எடப்பாடியாரின் ஆணை பெற்று நானும் பங்கேற்றேன் ஆகவே இதை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை அளிக்கப்பட்டது.


மேலும் திருமங்கலம் நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எடப்பாடியாரின் ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது, ஆனால் அந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது, திருமங்கலம் ரயில்வே கேட் அருகே அணுகு சாலை அமைக்க கோரிக்கை விடப்பட்டது ஆனால் அதையும் நிறைவேற்றாமல் உள்ளதால் விபத்து நடைபெறுகிறது, அதேபோல கொக்குளம் பகுதியில் சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது இதை முழுமையாக அமைக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டது.


உசிலம்பட்டியில் மூக்கையாதேவருக்கு சிலை வைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார், மேலும் கைரேகை சட்டத்தை எதிர்த்து உயிர் நீத்த தியாகிகளுக்கு பெருங்காமநல்லூரில் ஐந்தரை
ஏக்கர நிலப்பரப்பில் ஒன்றை கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிட்டு,நிதியை ஒதுக்கியவர் எடப்பாடியார்,


அதேபோல கள்ளர்சீரமைப்பு
துறையில் பிரச்சனை ஏற்பட்ட போது உரிமைக்குரல் எழுப்பி உண்ணாவிரதம் நடத்தி அதை தடுத்து நிறுத்தியவர் எடப்பாடியார், ஆட்சியில் இருக்கும்போது இல்லாதபோதும் சரி இல்லாத போதும் சரி, இந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தந்தவர் எடப்பாடியார் இன்றைக்கு தென் மாவட்ட மக்களின் காவல் அரணாக  எடப்பாடியார் உள்ளார்.


தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது, மனுக்கள் கொடுப்பது தான் மிச்சமாக உள்ளது, மனு எங்கே போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கை இல்லை, மக்கள் கோரிக்கையை இந்த அரசு புறக்கணித்தால் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சர் வருவார் அப்போது மக்கள் கோரிக்கைக்கு முன்னுரிமை அளித்து அதை செயல்படுத்துவார்.


கடந்த  தேர்தல் அறிக்கையில் திமுக 525 வாக்குறுதியை கொடுத்தனர், இதுகுறித்து ஆளுநர் உரையில் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார் ஆனால் இதற்கு பதில் ஏதும் கூறவில்லை, இன்றைக்கு நீதிமன்றமே ஸ்டாலின் அரசின் சட்ட ஒழுங்கை கடுமையாக கண்டித்துள்ளது, நீதிமன்றம் உத்தரவிட்டும்,ஸ்டாலின் திமுக அரசு காவல்துறை அதை நிறைவேற்றவில்லை என்று கடுமையாக கண்டித்துள்ளது


எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது ரயில்வே மேம்பாட்டு திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிதியை பெற்று தந்தார் ,ஆனால் இன்றைக்கு மொட்ரோ ரயில்வே திட்டத்திற்கு நிதி பெற முடியவில்லை, தென் மாவட்ட அகல ரயில் பாதை திட்டத்திற்கு நிதியைப் பெற முடியவில்லை, கல்விக்கு நிதியை பெறமுடிய வில்லை, வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியை பெற முடியவில்லை, ஆனால் பிரதமரை வைத்து விழா நடத்துகிறார்கள், அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சரை வைத்து தனது தந்தைக்கு நாணயம் வெளியீட்டு விழா நடத்துகிறார் ஸ்டாலின்,ஆனால் அவரால் நிதியை ஏன் பெற முடியவில்லை, அதுக்கு அக்கரை செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad