நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம்.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் திருச்செந்தூர் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியர் இயக்க ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான தேர்வு முகாம் துவக்க விழா நடைபெற்றது. 

முகாமிற்கு, தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்று முகாமின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். 

மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். 

எழுத்துத் தேர்வு, கூடாரம் அமைத்தல் செய்முறை தேர்வு, கொடி பாடல், இறை வணக்கப் பாடல், சாரணர் இயக்கத்தின் விதிமுறைகள் குறித்த தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு,அதன் அடிப்படையில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்து ராஜ்ய புரஸ்கார் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். 

விருது பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பின்னர் நடைபெறும் ஜனாதிபதி விருதுக்கான தேர்வில் கலந்து கொள்வதற்கு தகுதி பெறுவார்கள். முகாம் புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

சாரணர் இயக்க மாநில முதன்மைத் தேர்வாளர் பிரான்சிஸ் அலாய், சாரணியர் இயக்க மாநில முதன்மை தேர்வாளர் பவானி பாய், திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க ஆணையர் சாமுவேல் சத்தியசீலன், முகாம் ஒருங்கிணைப்பாளர் காந்திமதி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ஆபிரகாம் இம்மானுவேல், ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், ஓவியக் கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad