தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவரம் நிகழ்ச்சி நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவா் கராத்தே கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு, தூத்துக்குடி மாவட்ட ஹெச்எம்எஸ் உழைப்பாளா்கள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு நல சங்கம் ஆகியவை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் சுயம்வரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் மாா்ச்- 9ஆம் தேதி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது. 

இதில் தங்களது துணையை தோ்ந்தெடுக்க விரும்பும் அனைத்துவகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இதில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளாா் என்றாா்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad