காட்பாடி , பிப் 22 -
வேலூர் மாவட்டம் காட்பாடி
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையை அறிவிப்பினை ஏற்று வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு காந்திநகர் துளிர் பள்ளியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டு தலுடன் நடைபெறும் காட்பாடி வட்டம் துளிர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை ஆசிரியர் த.கனகா ஆசிரியர்கள் சே.சித்ரா, சு.மலர்கொடி, வெ.பாரதி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம் தேமதுர தமிழோசை உலகமெங்கும் ஒழிக்க எந்நாளும் உழைத்திடுவோம் அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம் இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலக தாய்மொழி நாளான இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக