உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது அப்பொழுது பள்ளி தலைமை ஆசிரியர் பாபு கென்னடி தலைமை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார் .சிறப்பு விருந்தினராக கவிஞர் எல்ஐசி தெய்வீகன் முன்னிலை வகித்தார். பட்டதாரி தமிழ் ஆசிரியர்கள் ராஜா, லூசியா மேரி, உளுந்தூர்பேட்டை தமிழ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், கவிஞர்கள் செடுத்தான் செ ஆரா, வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் அப்பொழுது பள்ளி மாணவர்களின் பேச்சுப்போட்டி வில்லுப்பாட்டு திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
தமிழககுரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழககுரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக