நெமிலி கிழக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் நெமிலி பேரூர் தி.மு.க சார்பில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!
ராணிப்பேட்டை, பிப் 22 -
ராணிப்பேட்டை மாவட்டம்
திராவிட நாயகர், கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந் தலைவர் பெ.வடிவேலு அவர்கள் தலைமையில், நெமிலி பேரூர் செயலாளர் G.ஜனார்த்தனன் அவர்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நெமிலி கலா பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!
1. மார்ச்-1, அன்று கிளைக் கழகம் மற்றும் பேரூராட்சி வார்டுகள் முழுவதும் கழகத்தின் இருவண்ணக் கொடி ஏற்றி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்குதல்.
2. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்!!
3. கழகத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு, மார்ச்-16 அன்று, நெமிலி கிழக்கு ஒன்றியம் மற்றும் நெமிலி பேரூர் சார்பில், கழக அரசின் சாதனைகளை விளக்கி, மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன், ஆர்.காந்தி அவர்கள், கழக அமைப்பு செயலாளர், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அண்மையில் *மறைந்த கழக நிர்வாகிகளுக்கு மவுன அஞ்சலி* செலுத்தப்பட்டது!! இக்கூட்டத்தில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர், பவானி வடிவேலு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், நெமிலி பேரூராட்சி மன்ற தலைவர், ரேணுகாதேவி சரவணன், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர.
ராணிப்பேட்டை சிறப்பு செய்தியாளர் பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக