வெளிநாட்டு வேலைக்கு சென்று சிறையில் இருப்பவரை மீட்டுத் தர மனைவி கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

வெளிநாட்டு வேலைக்கு சென்று சிறையில் இருப்பவரை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

IMG-20250214-WA0059

வெளிநாட்டு வேலைக்கு சென்று சிறையில் இருப்பவரை மீட்டுத் தர மனைவி கோரிக்கை


பேராவூரணி, பிப்.14 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் மகன் மதியழகன் (வயது-47) இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி வேலை பார்ப்பதற்காக மலேசியாவிற்கு சென்றார். 


இந்நிலையில், மலேசியாவில் வேலைக்கு சேர்ந்து குடும்பச் செலவுக்கு பணம் அனுப்பி வந்த நிலையில், கடந்த 2024 அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அவரது மனைவி சசிகலாவுக்கு மலேசியாவில் இருந்து செல்போன் அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது கணவர் மதியழகன் மலேசியா நாட்டின், சிலாங்கூர் மாநிலத்தில், உள்ள காஜாங் சிறையில் இருப்பதாகவும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும், அவரோடு சிறையில் இருந்து, வெளிவந்த நபர் தெரிவித்துள்ளார். 


இதனால் பதறிப்போன சசிகலா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் உதவியை நாடினார். தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை தொடர்பு கொண்டு சிறையில் உள்ள மதியழகனை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க சசிகலாவிடம் பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பினார். மதியழகனுக்கு பட்டப்படிப்பு படித்த மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் : சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாரிடம் கணவரை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்த பெண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad