ஏர்வாடி பேரூராட்சியுடன் அடஞ்சேரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: வாலிநோக்கம் ஊராட்சியுடன் தொடர மக்கள் விருப்பம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

ஏர்வாடி பேரூராட்சியுடன் அடஞ்சேரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: வாலிநோக்கம் ஊராட்சியுடன் தொடர மக்கள் விருப்பம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!

 

IMG-20250225-WA0119

ஏர்வாடி பேரூராட்சியுடன் அடஞ்சேரி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு: வாலிநோக்கம் ஊராட்சியுடன் தொடர மக்கள் விருப்பம் - ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு..!


இராமநாதபுரம் பிப்25- ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் ஊராட்சியை சேர்ந்த 'அடஞ்சேரி' கிராமத்தை தற்போது ஊராட்சி அந்தஸ்த்தில் இருக்கும் ஏர்வாடியை பேரூராட்சியாக தரம் உயர்த்தி ஏர்வாடி ஊராட்சியுடன் இணைக்க இருப்பதாக வெளிவந்த  தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்து ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர்கள், தற்போது நாங்கள் இருந்து வரும் வாலிநோக்கம் ஊராட்சியில் எங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவாகவே செய்து தரப்பட்டுள்ளது. அங்கு எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதி குறையும் இல்லை. 


மேலும் அனைத்து விஷயங்களையும் சர்வ சுதந்திரமாக செய்து வருகிறோம் ஆனால் அரசு தரப்பில் இருந்து தற்போது, ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் போது எங்களது அடஞ்சேரி கிராமத்தை ஏர்வாடி பேரூராட்சியுடன் இணைக்க போவதாக அதிகாரப்பூர்வமாக கிடைத்த தகவலை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். நாங்கள் வாலிநோக்கம் கிராம ஊராட்சியுடன் நாங்கள் தொடரவே விரும்புகிறோம், எங்களுக்கு ஏர்வாடி பேரூராட்சியுடன் இணைக்க விருப்பமில்லை, மாறாக அரசு எங்களை ஏர்வாடி பேரூராட்சி உடன் இணைக்க நினைத்தால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad