கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி

 

IMG-20250222-WA0021

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரங்கப்பனூர் கிராமத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாரம் ரங்கப்பனூர்  கிராமத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மையமாக்கள்  திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை சார்பாக  திறன் மேம்பாட்டு பயிற்சி  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. R.M.S.K #அர்ச்சனா_காமராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இப்பயிற்சியில்  தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்  திரு சத்யராஜ் அவர்கள்  தலைமை தாங்கி  பயிற்சிணை  ஆரம்பித்து வைத்தார். இப்ப பயிற்சியில்  நீர்வள துறை சார்ந்த பொறியாளர்  திரு முருகேசன் அவர்கள்  கலந்துகொண்டு  தன் துறையில் உள்ள திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.  மேலும் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர் சிவா கலந்து கொண்டார். மேலும் இயற்கை விவசாயத்தைப் பற்றியும்  இயற்கை இடுபொருட்கள் உற்பத்தியை பற்றியும்  அதை எவ்வாறு உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என்ற நுட்பத்தை திரு ராஜசேகர் எடுத்துரைத்தார்.  மேலும் கிராம மக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு  பயன்பெற்றனர். இறுதியாக தோட்டக்கலை அலுவலர் திருமதி ஷோபனா அவர்கள்  நன்றி உரை வழங்கினார். கூட்டத்தை உதவி தோட்டக்கலை அலுவலர்.திரு தேவநாதன் அவர்கள் ஏற்பாடு செய்தார். மற்றும் ஊர் பொதுமக்கள் மகளிர்கள் ரங்கப்பனூர் ஊராட்சி செயலர் திருமால்வளவன் அவர்கள் கலந்து கொண்டனர்


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad