விகடன் இணையதளம் முடக்கம் - பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் - ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம் - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

விகடன் இணையதளம் முடக்கம் - பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் - ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம்

IMG_20250217_182931_929

விகடன் இணையதளம் முடக்கம் - பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும்  - ஒன்றிய பா ஜ க அரசு.காயல் அப்பாஸ் கண்டனம்.


மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.


அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையிலும் இதனை கண்டு கொள்ளாத ஒன்றிய பா ஜ க அரசின் செயலை சுட்டி காட்டும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன் இணையதளத்தை  முடக்கிய ஒன்றிய பா ஜ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.


ஆளும் ஒன்றிய - மாநில அரசுகளின் செயல் பாடுகளை சுட்டி காட்டினாலோ அல்லது உண்மை தன்மையான பத்திரிக்கை செய்திகளை  வெளியிட்டாலோ பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் போடுவது  மற்றும் பத்திரிக்கைகள் அதன் சமூக வளைதளங்களை முடக்குவது போன்ற செயல் பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயலாக உள்ளது .


ஆகவே - இந்தியாவின் நான்காவது தூனாக உள்ள பத்திரிக்கையின் செய்தியாளர்கள் எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் சுதந்திரமாக செயல் பட ஆளும் ஒன்றிய- மாநில அரசுகள் பத்திரிக்கையாளர்களுக்கு முக்கிய துவம் அளிக்க வேண்டும். மேலும் முடக்கம் செய்த விகடன் இணைய தளத்தை உடனடியாக ஒன்றிய அரசு முடக்கத்தை நீக்கி பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக செயல் பட விட வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad