திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரத்தை சார்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் அனுசேகர் (25) பணிபுரிந்து வருகிறார்.இன்று காலை செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்தது.பயணிகளை இறக்கிவிட்டு ரயில் கிளம்பும் போது ஸ்டேஷன் மாஸ்டர் ஏற முயற்சி செய்யும் பொழுது கால் தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக