காட்பாடி ,பிப் 18 -
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்து பவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா. மதிவாணன் உத்தரவின் பேரில், இன்று 18.02.2025-ம் தேதி,காட்பாடி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில், காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு தொடர்பாக, ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எதிரி முகமது அசாத் (வயது 23), த/பெ. சபீர், சித்தார்த் நகர், உத்தர் பிரதேஷ் என்பவர், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 1.700 கிலோ கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து, எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டு 102 உள் மாநில மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்து எதிரிகள் மீது 03 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக