ஜாக்டோ ஜியோ குடியாத்தம் வட்டத்தில் மறியல் போராட்ட பிரச்சாரம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

ஜாக்டோ ஜியோ குடியாத்தம் வட்டத்தில் மறியல் போராட்ட பிரச்சாரம்!


குடியாத்தம், பிப் 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜியோ குடியாத்தம் வட்டத்தில் மறியல் போராட்ட பிரச்சாரம் வட்டளவில் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் பிரச்சார இயக்கம் நேற்று தொடங்கியது. தேர்தல் கால வாக்குறு திகளை நிறைவேற்றக் கோரியும் பழைய ஓய்வூதிய திட்டம் ஈட்டிய விடுப்பு ஒப்பவித் தல் மீண்டும் வழங்கிட கோருதல் தொகுப் பூதியம் மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியங் களை ரத்து செய்து அனைவருக்கும் முறையான காலமுடைய ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட தலை நகரங்களில் மறியல் போராட்டம் நடத்து வதற்கான பிரச்சார பயணம் நேற்று குடியாத்தத்தில் துவங்கியது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப் பாளராக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பின ருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு பேசினார் மாவட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர் ஜெயக்குமார் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில சட்ட செயலாளர் காந்தி சத்துண ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பிரச்சார இயக்கம் வட்ட அளவில் உள்ள அனைத்து அலுவலகங் கள் பள்ளி கல்லூரிகளில் துண்டறிக் கைகள் வெளியிட்டு மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்றன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad