உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வந்ததை தொடர்ந்து அந்தப் பள்ளியில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையேற்று மாணவர்களிடையே மோதல் தகராறு ஏற்படாமல் இருக்கவும் மாணவர்கள் தகராறில் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை எடுக்கும் நடவடிக்கையின் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக பேசினார். மேலும் மாணவர்கள் தகராறு ஈடுபட்டால் பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுவதோடு அது சாதி ரீதியான மோதலாக மாற வாய்ப்பு இருப்பதால் பள்ளிக்காலத்தில் மாணவர்கள் தகராறில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசன், திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜித்தன், உதவி காவல் ஆய்வாளர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக