கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வட செட்டி யந்தல் கிராம அரசு துவக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழா அசத்தலாக நடனமாடி வியப்பில் ஆழ்த்திய மாணவ மாணவியர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம்,வட செட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில், பேச்சுப்போட்டி,இசை, நடனம்,பாட்டு, தனித்திறன் பரதநாட்டியம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக மேடைகளில் மாணவ மாணவியர்கள் ஆடியது கண்டு பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் மிகவும் ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர் மேலும் இந்நிகழ்வுக்காக மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை ஊக்கப்படுத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினர் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி மணிவண்ணன் பள்ளியின் தலைமையாசிரியர் இலட்சுமி,அஞ்சல் துறை ஓய்வு கந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கலைச்செல்வன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மும்தாஜ் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் பட்டதாரி ஆசிரியர் சூசை ராஜ், கிருஷ்ணன், ஹெலன், கலைவாணி,ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். மேலும் இதில் வார்டு உறுப்பினர்கள் அறிவழகன், இராமசாமி,மணிவேல் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக