குடியாத்தம் , பிப் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . பிப்.16. அன்று வேலூர் கோட்டை மைதானத்த்தில் பிரமாண்ட மாக நடைபெறவுள்ள கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை வேலூர் மண்டல மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்தும் டாக்டர் புரட்சித் செல்வி ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் R.S. ரோடு செதுக்கரை ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா R.மூர்த்தி, காடை G.P. மூர்த்தி, பாசறை மாவட்ட செயலாளர் A.D.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் அவர்கள் கலந்து கொண்டு மாநாடு குறித்து ஆலோசனைகளையும் மாநாட்டுக்கான ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டியும் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் A.ரவிச்சந்திரன்,M.பூங்கொடி மூர்த்தி, K.அமுதா கருணா, , R.K.மகாலிங்கம், S.I.அன்வர் பாஷா, V.ரித்தீஷ், மாலிபட்டு M.C.பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் K.லாவண்யா குமரன், M.ரேவதி மோகன், A.சிட்டிபாபு உட்பட மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக