இராமநாதபுரம் மாவட்ட அளவிலான திருக்குறளின், சிறப்பினை உணர்த்தும் குறும்பட போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அரசு மகளிர் கல்லூரி மாணவி ரம்யா வுக்கு உயர் கல்வி துறை அமைச்சர் கோ. வி.செழியன், பரிசு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனையியல் முதலாம் ஆண்டு பயிலும் பனைக்குளம் ஊராட்சி பொன்குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் (டிவி.மெக்கானிக்) மகள் மாணவி மு.ரம்யா திருக்குறள் சிறப்பினை உணர்த்தும் மீக்குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவிலான இரண்டாம் இடத்தை பெற்றுள்ள மாணவிகள் பொன்குளம் முருகன் மகள் ரம்யா மற்றும் வழுதூர்.கண்ணன் மகள் கனிமொழி, கிளியூர்.செல்வராஜ், மகள் சூர்யா, ஆர்.எஸ்.மடை பரமசிவம், மகள் பாலரித்திகா ஆகியோருக்கு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ. வி.செழியன், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக