தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் கடித்து கொதறிய தெரு நாய்கள் பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் கடித்து கொதறிய தெரு நாய்கள் பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மான் கடித்து கொதறிய தெரு நாய்கள் பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு!
குடியாத்தம் , பிப் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானை நாய்கள் கடித்ததை கண்ட பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பகுதியில் காப்புக்காட்டில் இருந்து வழி தவறி தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் இரண்டு வயது ஆண் மான் வந்துள்ளது. இதனைக் கண்ட பகுதியில் உள்ள நாய்கள் அதனை துரத்தி கடித்துக் கொண்டிருந்ததை கண்ட பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மீட்டு மானை கட்டி வைத்து குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்,உடனடியாக குடியாத்தம் வனத்துறை வனக்காவலர் பூபதி மானை மீட்டு முதலுதவி செய்யப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் கல்லப்பாடி காப்புக்காட்டில் பத்திரமாக மானை விட்டனர். .

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

மேலும் பொதுமக்கள் கூறுவையில் காப்பு காட்டை ஒட்டி உள்ள வனத்துறைக்கு சொந்தமான தொட்டிகளில் தண்ணீர் நிரப்பினால் மான், சிறுத்தை , யானை போன்ற வன விலங்குகள் ஊருக்குள் வராமல்   தடுக்கலாம் காப்புக்காட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உடனடியாக தண்ணீர் நிரப்ப வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad