குடியாத்தம் , பிப் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலம்நேர் சாலை அரசமரம் அருகே இன்று மாலை சிஐடியு நெசவாளர் சங்கமும் வேலூர் மாவட்ட காங்கிரஸ் நெசவாளர் அணியும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நெசவாளர் அணி கோ ஜெயவேல் சி ஐ டி யு என் லெனின் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் தோழர்கள் கு தனசேகர் எஸ் விண்டல் விக்கி இரா அன்பரசு பா ஜீவானந்தம் ஜே அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோரிக்கை விளக்கவுரை தோழர்கள் சு சம்பத்குமார் முல்லை வாசன் மாநில செயல் தலைவர் எஸ் எம் தேவராஜ் மருத்துவர் சிவ சிதம் பரநாதன் ஆகியோர் விளக்குரை யாற்றினார்கள் குடியாத்தம் பிச்சனூர் கங்காதர சுவாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும் 25 1 2025 முதல் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் கூலியை வங்கி மூலம் வழங்குவதை ரத்து செய்து கூலியை ரொக்கமாக வழங்க கோரியும் கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் பென்சனை 1200 ரூபாயிலி ருந்து 5000 ஆக உயர்த்தி வழங்க கோரியும் பாண்டிச்சேரி ஆந்திரா மாநிலங்களில் உள்ளது போல வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இறுதியில் விபி சங்கர் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக