பயன்பாடில்லாமல் பாழடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

பயன்பாடில்லாமல் பாழடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனை.

பயன்பாடில்லாமல் பாழடைந்த நிலையில் கால்நடை மருத்துவமனை

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்துறை கால்நடை மருத்துவமனையானது பல காலமாகவே பயன்பாடில்லாமல் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இடியும் தருவாயில் உள்ளது. 

கால்நடை மருத்துவமனையை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி காடு போல உள்ளது. கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவரோ, ஊழியர்களோ இல்லை. இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் கால்நடைகளுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளுக்கு பல கிலோமீட்டர்கள் பயணம் செய்து வேறு கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. 

அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்படி கால்நடை மருத்துவமனைக்கு விரைந்து புதிய கட்டிடம் கட்டி கொடுத்து தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் இருக்கன்துறை ஊர் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad