மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்!


பேரணாம்பட்டு , பிப் 26 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை சிறப்பு முகாம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி 
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செந்தில் குமரன் ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா ஜனார்த்தனம் பேர்ணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா துணைத் தலைவர் 
ஆலியார்‌ ஜுபேதார் மாவடட ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி 
மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்  உத்தரகுமாரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார் கௌரி 
மற்றும் 19 துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர் 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நல திட்டங்களை சென்றடைய 19 அரசு துறைகளுடன் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை உதவித் தொகை கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை போன்றவைகளை கேட்டு மனு அளித்தனர் இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் பெட்ரோல் ஸ்கூட்டர் ஓய்வு ஊதியம் மாற்றுத்திறனாளி காரண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad