பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் பொது விருந்து. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 3 பிப்ரவரி, 2025

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் பொது விருந்து.

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் பொது விருந்து இணை ஆணையாளர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் பக்தர்களுக்கு பொது விருந்து வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இணை ஆணையாளர் அன்புமணி கலந்துகொண்டு பக்தர்களுக்கு பொது விருந்தை தொடங்கி வைத்தார். இதில் உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். 

 சாத்தான்குளம் ஆய்வாளர் முத்து மாரியம்மாள், அயல் பணியாளர் வெங்கடேஸ்வரி, மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், குலசை அலாவுதீன், கோவில் கணக்கர் டெமிட்டோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad