பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் தொடக்க விழா ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் தொடக்க விழா !



பேரணாம்பட்டு , பிப் 18 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டம் தொடக்க விழா  நடைபெற்றது ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், பேர்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்பட்டி அருகேயுள்ள கொத்தமாரிக்குப்பம் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் மாதனூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட விண்ணமங்கலம் கிராமத்தில் தங்களது பணியைத் தொடங்கினர்.
மாதனூர் வட்டார குழுவைச் சேர்ந்த மாணவிகள்  ஹரிணி. செ, ஜெய் ஶ்ரீ பி. ஷி, ஜாஸ்மின் பாத்திமா, செ.ஜீவிதா, த. கனிகா, மு, கவிதா, ரா.காவ்யகவி, பு.ரா.லாவண்யா, சி, லாவண்யா, சி.லேகா சுருதி.ர உள்பட பல மாணவிகள் அனுபவ திட்டத்தின் கீழ் பணியைத் தொடர்ந்துள்ளனர்.
இவர்கள் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதோடு, மாணவிகள் தங்களுக் குள்ளும் அனுபவத்தை கற்றறிய உள்ளனர்.பாலாறு வேளாண்மை கல்லூரியின் சார்பாக கல்லூரி முதல்வர் என். தமிழ்செல்வன். உதவி பேராசிரி யர்கள் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை யாற்றினர். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் பி.சுஜாதா,வேளாண் உதவி இயக்குனர் ஆர்.ஶ்ரீனிவாசன்.( வேளாண் அலுவலர்  வேலு ),வட்டார தொழில்நுட்ப மேலாளர் உமா மகேஸ்வரி,, உதவி தொழில்நுட்ப மேலாளர் புவின் குமார், துணை தோட்டக்கலை அலுவலர் கோவிந்தன் மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad