கன்னியாகுமரி மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் கோரிக்கை
பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு இஞ்சின் ஆயில் மற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்,மத்திய அரசு வழங்கும் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை திரும்ப பெற வேண்டும், இருசக்கர தொழிலாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட நேதாஜி இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தலைமை நலச் சங்கம் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைப்பெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்-மேலும் இருசக்கர வாகனங்களின் உதிரிபாகக் கண்காட்சி நடைபெற்றது-இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான இருசக்கர வாகனங்களுக்கு தற்போதுள்ள நவீன தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக