ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், பாசூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா.... - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், பாசூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா....

IMG-20250212-WA0164

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், பாசூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் திருவிழா....


நிகழ்ச்சி நிரல்...


1) தை மாதம் 29 ஆம் தேதி 11.02.2025 செவ்வாய்க்கிழமை இரவு அருள்மிகு மகா மாரியம்மன் பூச்சாட்டுதல் திருவிழா

    2) மாசி மாதம் 01 ஆம் தேதி 13.02.2025 வியாழக்கிழமை இரவு காவேரி கரையில் இருந்து திருக்கம்பம் அழைத்து வந்து கம்பம் நடும் விழா மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெறும்

   3) மாசி மாதம் 03 ஆம் தேதி 15.02.2025 சனிக்கிழமை திருபூவோடு வைத்தல் விழா நடைபெறும் 

    4) மாசி மாதம் 14 ஆம் தேதி 26.02.2025 புதன்கிழமை அதிகாலை முப்பாட்டு மாவிளக்கு பூஜை நடைபெறும்

மாலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி கோவிலுக்கு வந்த பின் 62 அடி திருகுண்டம் இறங்கும் விழா நடைபெறும்

   5) மாசி மாதம் 15 ஆம் தேதி 27.02.2025 வியாழக்கிழமை பொங்கல் வைக்கும் விழா மற்றும் இரவு திருக்கம்பம் காவேரிக்கு கொண்டு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்

    6) மாசி மாதம் 16 ஆம் தேதி 28/02/2025 வெள்ளிக்கிழமை அருள்மிகு மகா மாரியம்மன் ஊஞ்சல் சேவை அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா, மற்றும் மறுபூஜை நடைபெறும்


    கம்பம் நட்ட நாள் முதல் 15 நாட்கள் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபடுகின்றனர் 

தினமும் இரவு 9 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்...


தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad