திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை, தாராபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஊர்வலமாக வந்து தமிழ் நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட் ஆட்சியர் கிருஸ்துராஜிடம் மனு அளித்தனர்.மேலும் கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்து தாராபுரம் ஒன்றிய பகுதியாகவே செயல் பட விரும்புவதாக பொதுமக்கள், தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் கூறுகையில், கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்து மற்றும் நஞ்சியம் பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர்.கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை தாராபுரம் நகராச்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை கிடைக்காது. மேலும் வீட்டு வரி,சொத்து வரி, குடிநீர் வரி என அணைத்து வரியும் உயர்ந்தது விடும். மேலும் புதிதாக வீடு கட்ட, பழைய வீட்டை பராமரிக்க அரசு வழங்கும் சலுகைகள் எதுவும் கிடைக்காது. கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை தாராபுரம் நகராச்சியுடன் இணைத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் எனவே கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை தாராபுரம் நகராச்சியுடன் இணைக்க வேண்டாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Post Top Ad
வியாழன், 20 பிப்ரவரி, 2025
Home
தாராபுரம்
தாராபுராபுரத்தில், கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைப்பதற்க்கு பொதுமக்கள் எதிர்ப்பு .
தாராபுராபுரத்தில், கவுண்டச்சி புதூர் மற்றும் நஞ்சியம் பாளையம் பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைப்பதற்க்கு பொதுமக்கள் எதிர்ப்பு .
Tags
# தாராபுரம்
About Reporter
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
Newer Article
மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் மறைவிற்கு பி. டி. செல்வகுமார் இரங்கல் தெரிவித்தார்
Older Article
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக