இராமேசுவரம் வரையில் விரைவில் பயணிகள் ரயில், பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு இறுதி கட்ட ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பாலம் ரூபாய் 145 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது இந்நிலையில் இதற்கான இறுதி கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவின்போது நடைபெறும் நிகழ்வு குறித்து முன்னோட்டமாக இரண்டாவது முறையாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட பொறியாளர் சரத்ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின் போது புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலம் பழைய ரயில் பாலத்தின் தூக்குபாலம் ஆகியவை திறக்கப்பட்டு அதன் வழியாக இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் கடந்து சென்றது, அதனைத் தொடர்ந்து பாம்பன் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்கப்பட்டு பயணிகள் இல்லாத காலி பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் ராமேஸ்வரம் வரையில் இயக்கப்பட்டு இறுதி கட்ட ஆய்வு நடைபெற்றது. திறப்பு விழாவிற்கான முன்னோட்டாக ஒத்திகை பாம்பன் சாலை பாலத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்ட மேடையில் நின்றவாறு மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார் இதன் திறப்பு விழா விரைவில் அறிவிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் டெல்லியில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்னும் சில நாட்களில் இப்பாலம் திறக்கப்பட உள்ளதாக தெரிகிறது. திறப்பு விழாவில் பாரத பிரதமர் கலந்து கொண்டு திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது,
அதற்காக இராமேசுவரம் ரயில் நிலையம் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக