முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர், காளியம்மன், சீனிவாச பெருமாள், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர், காளியம்மன், சீனிவாச பெருமாள், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

 

IMG-20250204-WA0003

முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர், காளியம்மன், சீனிவாச பெருமாள், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ சீனிவாச பெருமாள் ,ஸ்ரீ இருக்கங்குடி மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.


 விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகர் வழிபாடு. புனித தீர்த்த குடம் அழைப்பு செய்து, விக்னேஸ்வர பூஜை ,யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட சடங்குகள் முடிந்து, கோ பூஜை ,திருப்பாவை சாற்றுமுறை, பூர்ணாகுதி நிறைவு பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் மாலை வரவேற்பு செய்து, சாற்று முறை செய்தார்கள் .


அதனைத் தொடர்ந்து நேற்று காலை மூலவர்களுக்கு மகாபிஷேகமும் , விமான கலச கும்பாபிஷேகமும் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . கும்பாபிஷேக நிகழ்வின்போது வானத்தில் பல கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து ,கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad