பரமக்குடி அருகே நைனார்கோவில் நாகநாதசுவாமி, சவுந்தர நாயகி அம்மன் தைப்பூச தீத்தவாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார்கோவில் நாகநாதர் சுவாமி சவுந்தரநாயகி அம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி தீர்த்தவாரி வழிபாடு மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள வைகை ஆற்றில் மண்டகபடியில் வைக்கப்பட்டு, தீபாராதனைகளும், விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் பூப்பல்லாக்கில் வைகை ஆற்றுக்குள் சென்று சிவாச்சாரிகள் குளத்தில் இறங்கி தீர்த்தவாரி நடத்தினர். சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது திருவிழாவில் கலந்து கொள்ள வந்த 12 கிராம பொதுமக்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறி மற்றும் பழங்களை சுவாமி மீது சூறையிட்டு வழிபட்டனர். சொந்த நிலங்களில் விளையும் சிறுதானியங்கள் மற்றும் காய்கறிகள் நல்ல விளைச்சல் இறைவன் அருளால் நிகழ்ந்தது என்பதற்காக இந்த திருவிழாவில் காய் மற்றும் பழங்களை சுவாமி மீது சூறை வீசி வழிபடுவார்கள்.
இவ்விழாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் இளையமன்னர் நாகேந்திர சேதுபதி, சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், சுற்று வட்டார 12 கிராம மக்கள் மற்றும் நயினார்கோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு நாகநாதர் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக