சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நில உடைமை பதிவுகளை சரிபார்த்தல் முகாமில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மாலதி நேரில் ஆய்வு மேற்கொண்டதில், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 80 வருவாய் கிராமங்களிலும் நில உடைமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகம், மகளிர் திட்ட சமூக வள பயிற்றுநர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளும் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் போன்ற ஆவணங்களை தங்கள் பகுதிகளில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமிற்கு நேரில் எடுத்து சென்று பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு ஆதார் அட்டை எண் போன்ற விவசாய அடையாள எண் வழங்கப்படும் என வேளாண்மை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சாந்தி, அலுவலர்கள் உடனிருந்தனர்.
பேராவூரணி நீலகண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக