பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டது.

IMG-20250213-WA0243

திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக பழனி,அழகுமலை, சிவன்மலை, கைத்தமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடைபாதையாக பாதயாத்திரை சென்று கொண்டிருக்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சாலையோரம் நடக்கும் பொழுது சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து உள்ளிட்ட ஆபத்துகள் நிகழாத வகையில் முன்னேற்பாடாக பக்தர்களின் பைகள், உடைகள், கை குச்சி உள்ளிட்ட உடைமைகளிலும்

தூக்கிச் செல்லும் காவடியிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் புஷ்பா பேருந்து நிறுத்தம் குமரன் சாலை ஆகிய பகுதிகளிலும் தெற்கு போக்குவரத்து காவல்துறையின் சார்பில் திருப்பூர் பழைய பஸ் பேருந்து நிலையம் மாநகராட்சி கோவில் வழி பேருந்து நிலையம் நல்லூர் பேருந்து நிலையம் என பல்வேறு இடங்களில் முகாமிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வெள்ளை நிறம் கொண்ட ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர் பக்தர்கள் பாதை யாத்திரை செல்வதை வாகன ஓட்டிகள் அறிந்து கவனமாக செல்வதுடன் விபத்துகளும் தவிர்க்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான்

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad