மத்தியில் ஆளும் பாஜக அரசு இஸ்லாமிய சமூகத்தின் வக்ஃப் சொத்துக்களை பறித்திட சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை எதிர்த்து எஸ் டி பி ஐ கட்சி நாடு முழுவதும் வக்ஃப் சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டத்தை நடத்திவருகிறது..
அதில் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாவட்ட தலைவர் வி கே என் பாபு அவர்கள் தலைமையில் காங்கயம் ரோடு சிடிசி கார்னரில் நகல் எரிக்கும்
போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் வீ கேன் பாபு தலைமை வகிக்க
மாவட்ட பொது செயலாளர் அப்துல் வகாப்
மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் சத்தார்
மாவட்ட செயலாளர் இதயத்துல்லா அக்பர் அலி
மாவட்ட பொருளாளர் ஜாபிர் அஹமது மற்றும் மகளிர் அணியினர்,மாநில மாவட்ட மாநகர அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக