நெல்லை, வண்ணார்பேட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும் பட்டியல் சமூக மக்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட மகளிரணி தலைவி கனகராணி, ராதாபுரம் முத்துகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் நம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர் முகமது காஸிர் வரவேற்புரையாற்றினார்
மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் கண்டன உரையாற்றினார் இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் இசக்கிமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ராக்கேஷ், ராதாபுரம் தொகுதி இளைஞரணி செயலாளர் பிரவின், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் மிக்கேல்ராஜ்,
ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், ஒன்றிய துணை செயலாளர் செல்வக்குமார், களக்காடு நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் பால்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக