கும்பகோணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
கும்பகோணத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் காலை 8.00 முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சரஸ்வதி பாடசாலையில் (பிப்ரவரி 23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சைமாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் கும்பகோணம் முராரிலால் சேட்,தேவி தாஸ், ஆகியோரின் நினைவாக முராரி ஸ்வீட்ஸ் ன் 20 -வது ஆண்டாக நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமை சங்கத் தலைவர் லயன் Er டி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
வட்டார தலைவர் லயன் எஸ்..மோகன் , முன்னாள் தலைவர்கள் லயன் KVR வெங்கட்ராமன் G.பிரிதிவிராஜன் M N பரதன் ,L I.C K.R.அசோகன், K.R மனோகரன், R முரளிதாஸ் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்
அரசு மகளிர் கல்லூரி லியோ சங்கத்தின் தலைவர் அபர்ணா ,செயலாளர் ராஜஜேஸ்வரி ,பொருளாளர் பத்மாவதி,மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை பணியை சிறப்பாக செய்தார்கள்
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த 545 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 323 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை செயலாளர் Er எஸ் ஆர் முரளி, பொருளாளர் வி செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக