காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு முனைப்பு இயக்க முகாம்!
வேலூர்,பிப்.3 -
வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சிறப்பு முனைப்பு இயக்க முகாம் நடந்தது.
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதியில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் ஏற்கனவே பதிவு செய்த பத்திரங்கள் அரசின் மதிப்பீட்டிற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டவைகளை நிறுத்தி வைத்து அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இதற்காக சிறப்பு முனைப்பு இயக்க முகாம் 3ம் தேதி நடத்தப்பட்டது. இந்த முகாமில் பத்திரம் பதிவு செய்தவர்கள் மீதம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி அவர்களது பத்திரங்களை வாங்கிச் செல்லலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன் பேரில் நேற்று இந்த சிறப்பு முனைப்பு இயக்க முகாம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இந்த முகாமில் காட்பாடி மற்றும் கே. வி. குப்பம் வட்டங்களைச் சார்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நிலுவையில் இருந்த பத்திரங்களை அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி பெற்றுச் சென்றனர். இந்த முகாமுக்கு வேலூர் தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) பாலமுருகன் தலைமை வகித்தார். இந்த முகாமில் காட்பாடி சார் பதிவாளர் பிரகாஷ், கே. வி. குப்பம் சார் பதிவாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக