மானாமதுரை அருகில் அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

மானாமதுரை அருகில் அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது.

 

IMG-20250206-WA0057

மானாமதுரை அருகில் அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது. 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பள்ளி சென்று வரும் பொழுது 4 மாணவிகளுக்கு ஆபாச செய்கைகள், ஆபாச நடத்தைகள் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக சுமார்  7  நபர்களை கைது செய்து மானாமதுரை நகர் மற்றும் சிப்காட் காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாட்களாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பள்ளியில் குழந்தைகள் நல வாரியம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பள்ளி மாணவிகளிடம் புகார்களை கேட்டறிந்தபோது மாணவிகள் விபரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பெற்றோர்களுக்கும் இவ்விபரங்கள் தெரியவந்ததையடுத்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு அத்துமீறிய ஏழு நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad