திருமங்கலம் அருகே உடற்கல்வி ஆசிரியர் பரமேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மர்மமான முறையில் மரணம்.
பரமேஸ்வரன் (வயது 57 ) திருமணமானவர் விருதுநகர் அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியில் இருந்து காண்டை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு பயணித்த பொழுது மர்மமான முறையில் தலையில் பின்பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தார்.
காலையில் பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வந்து பார்த்த பொழுது அவரது உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறிய நிலையில் பரமேஸ்வரன் கொலையா அல்லது தற்கொலையா என சிந்துப்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றனர்.
பரமேஸ்வரர் திருமணம் முடிந்து ஒரு பெண் திருமணம் ஆனவர் மற்றும் ஆண் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பரமேஸ்வரன் மர்மமான முறையில் இறந்தது குறித்து இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பரமேஸ்வரன் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் திருமங்கலம் சிந்துபட்டி காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக