ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனீஸ்வரம் - கொட்டாரக்கரை - குந்தரா இடையே ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. ரயில் எண்.16791 தூத்துக்குடி - பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
2. ரயில் எண். 16792 பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக