கோவை, பிப் 7 -
கோயம்புத்தூர் மாவட்டம்
கோவை கா. கா. சாவடி பகுதியில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியினை உயிரியல் மருத்துவப் பொறியியல் துறை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் கே.ஏ.அக்பர் பாஷா தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி அ.தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக முனைவர் ந.விஜயன், சி.எஸ்.ஐ.ஆர்.என்.பி.எல் மூத்த கொள்கை விஞ்ஞானி மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டு ஆசிரியர்கள் இடையே ஆராய்ச்சி மற்றும் தொகுப்பு ஆய்வு நிதி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். இறுதியாக முனைவர் இ.நந்தகுமார் டீன் நன்றியுரை வழங்கினார் இதில் பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பு செய்தனர்.
தமிழக குரல் செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக