*வடபத்திரகாளியம்மன்* கோவில் வருஷாபிஷேக விழா
07.02.2025 வெள்ளிக்கிழமை
தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் நகரில் மேலத்தெருவில்
விஸ்வகர்மா சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட வடபத்திரகாளியம்மன் திருக்கோவிலுக்கு வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது....
காலையில்
தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது
ஆகமமுறைப்படி வேள்வி நடத்தி , கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது....
அதைத் தொடர்ந்து
மூலவர் ,
செல்வவிநாயகர் ,
ராகு கேது ,
லட்சுமி நாராயணர் ,
*விஸ்வகர்மா*
மற்றும்
பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்
சிறப்பு அலங்காரத்தைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது
இதில்
திரளாகப் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.....
சுமார் 175 வருட தொன்மையான இவ்வாலயம் ஏரலூரில் ஒரு முக்கியமான ஸ்தலமாகும்...
சமூக வரிதாரர்கள்
பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச்
சிறப்பித்தனர்
விஸ்வகர்ம நிர்வாகக் கமிட்டி மற்றும்
இளைஞரணி ஏற்பாடுகளை சிறப்பாக செய்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக