வேலூர் ,பிப் 25 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாடத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட 10அம்ச கோரிகக்களை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர் களும் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக 25.02.2025 செவ்வாய்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் அனைவரும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி.ஞானசேகரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி ஆசிரியர் நலச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், நகர தொழிற்சங்க கூட்டமைப்பின் கன்வீனர் சி.ஞான சேகரன் ஓய்வூதியர் சங்க ஒருங்கி ணைப்பு குழுவின் மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம், அகில இந்திய தபால் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எ.கதீர்அகமது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.முடிவில் மாவட்ட துணைத்தலைவர் எ.ராஜேந்திரன் நன்றி கூறினார். கோரிக்கைகள் பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்து மூவர் குழுவை ரத்து செய் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர் களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்கு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கு கமுடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகளாக குறைத்திடுக மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்திடுக என கோஷம் உறுப்பினர்..
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக