நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து-இதனால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அவதி- தீயணைக்க 3 தீயணைப்பு வானங்கள் தண்ணீரை பீச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அங்கு இதுபோன்ற தீ விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் குப்பை கிடங்கை அங்கிருந்து மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர், ஆனால் குப்பை கிடங்கை அங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக