தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, அரசூர் ஊராட்சி, செட்டியா பண்ணை அருகே பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க முயற்சி நடைபெற்றது.
அதனை கண்டித்து பொதுமக்கள் மற்றும் இந்து மகாசபா சார்பாக சாலை மறியல் நடத்த திட்டமிட்டு மக்கள் கூடிய நிலையில், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அறிவுரை கூறியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
மேலும் மதுக்கடையை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தால், மீண்டும் போராட்டம் தீவிரமடையும் என்பதை இந்து மகா சபா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக