ஸ்ரீவைகுண்டம் பிப். 8. நவதிருப்பதி கோவில்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் தைத் திருவிழா கருடசேவை இன்று நடந்தது.
ஆண்டு தோறும் தை மாதம் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டும் 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8.30 மணிக்கு திருமஞ்சனம். 9.30 மணிக்கு தீபாராதனை. 10 மணிக்கு உற்சவர் ஸ்வாமி கள்ளப்பிரான் கொடிமரம் சுற்றி தங்கமசகிரி மண்டபத்தில் எழுந்தருளினார்.
10.35 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 11 மணிக்கு தீபாராதனை.11.45 மணிக்கு நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆத்யாபர்கள் சீனிவாசன். சீனிவாச தாத்தம். பார்த்தசாரதி ஆகியோர் சேவித்தனர். 12.30 மணிக்கு சாத்துமுறை. தீர்த்தம்.
சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை. 7. மணிக்கு ஸ்வாமி கள்ளப்பிரான் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். கரு வாகனத்தில் 8 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் தை வீதி புறப்பாடு நடந்தது.
பிப் 12-ந்தேதி 10 ம் திருநாள் நத்தம். திருப்புளிங்குடி பெருமாள்களுடன் தெப்பம். பிப் 13 ந்தேதி 11 ம் திருநாள் ஸ்வாமி கள்ளப்பிரான் மோகினி திருக்கோலத்துடன் தெப்பம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் அனந்த பத்மநாபன். ரமேஷ். வாசு. நாராயணன். சீனு. நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் முருகன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா
உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். நீதிபதிகொண்டனர். கோவில் எழுத்தர் இசக்கிப்பாண்டி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக