மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் இருந்து காளவாசல் நோக்கி அதி வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த வந்த இளைஞர் பழைய தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எல்லீஸ் நகர் பிரிவு சாலையில் நேற்று 8.30.மணி அளவில் பாதசாரிகள் நடப்பதற்கான, சிக்னல் போட்டு இருந்தது அதையும் மதிக்காமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியுள்ளார். அப்பொழுது சாலையை கடக்க முயன்றதால் அதிவேகமாக சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதிய இளைஞர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து சாலையில் கடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீதும் மோதினர் இதில் இருவருமே படுகாயம் அடைந்தனர். உடனடியாக போக்குவரத்து போலீசார் முதியோர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சாலையில் ஓரத்தில் அமர வைத்தனர் பின் இளைஞர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆட்டோ மூலமாக அனுப்பி வைத்து படுகாயம் அடைந்த முதியவரை 108 அவசரகால உறுதி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில் போலீசார் எவ்வளவு சொல்லியும் நாளுக்கு நாள் இதுபோன்று இளைஞர்கள் அதிவேகமாக சிக்னலையும் மதிக்காமல் தலைக்கவசம் அணியாமல் சாலையை கடக்கும் நபர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அவர்களும் காயப்பட்டு நடந்து சாலையைக் கடக்கும் நபர்களையும் காயப்படுத்தி அவர்கள் குடும்பத்திற்கு சோகத்தை ஏற்படுத்துகிறார்கள் இதுபோன்று செய்யும் இளைஞர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து நிரந்தரமாக லைசென்ஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளை கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்று இனி நடக்காத அளவுக்கு தண்டனைகள் கொடுத்தால் தான் விபத்துக்கள் குறையும் என கூறுகின்றனர்..
விபத்துக்கள் குறித்து.
திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளரிடம் தங்கமணி. அவர்களோடு பேசிய போது விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து இரண்டு காவலர்கள் பணியில் இருந்தார்கள் சிக்னல்கள் முறையாக இயக்கப்பட்டு அனைத்து வாகன ஓட்டிகள் சிக்னலு மதித்து வாகனத்தை நிறுத்தி சாலையைக் கடக்கும் நபர்களுக்கு சாலை கடக்கும் வரை பொறுமையாக இருக்கிறார்கள் ஆனால் அதிவேக பைக்குகளை வைத்துக்கொண்டு ஒரு சில இளைஞர்கள் சிக்னலையும் மதிக்காமல் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல்கள் இருக்கும் பகுதிகளில் வாகனத்தில் வேகமாக இயக்குவதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது நாங்களும் எவ்வளவு தடுத்தும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்று தொடர்ந்து இவர்கள் செய்வதால் அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லாமல் முறையாக சிக்னலை பதித்து செல்லும் வாகனங்களும் மற்றும் சாலையை பாதசாரிகளுக்கும் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி காயங்கள் ஏற்பட்டு சில சமயங்களும் உயிரிழக்கும் ஏற்படுகிறது எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இவர்கள் திருந்துவதாக தெரியவில்லை பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு அதுவே பைக்குகளை வாங்கி கொடுத்து அவர்களே எமனாக மாறுவதாக இவர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படுத்தாமல் சாலை விதிகளை மதித்து செல்லும் நபர்களை குடும்பத்தையும் பாதிப்பை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படுத்துவதால் அவர்களது குடும்பம் பரிதவிப்புக்கு ஆளாகிறது நாங்கள் எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் இளைஞர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் விபத்தை தடுக்க முடியாது என தெரிவித்தார் எனினும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அபராதம் விதித்து ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வருவதற்கு பரிந்துரையும் செய்து வருகிறோம் தெரிவித்தார் அதிக செல்லும் காளவாசல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தி அவர்கள் மீது கட்டாயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக