மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் நாளை காலை அனைத்து குற்றவாளியும் கொண்டு வந்து நிறுத்துவார்கள் அவர்களால் முடியும்
எங்கள் ஆட்சியின் போது தப்பு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
திமுகவினர் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் தமிழக வாக்காளர்கள் தக்க நேரத்தில் பாடத்தை புகட்டுவார்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விருச்சங்குளம் விடத்தக்குளம் மைக்குடி கீழக்கோட்டை நடுகோட்டை வடகரை மேலக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிய வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன் மாநில நிர்வாகி புளியங்குளம் ராமகிருஷ்ணன் மாவட்ட அவைத் தலைவர் முருகன் மாவட்ட பொருளாளர் திருப்பதி மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவண பாண்டி பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் வழக்கறிஞர்கள் முத்துராஜ் வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலம் தொகுதி திருமங்கலம் ஊராட்சி விருசங்குளம் விடத்தக்குளம் மைக்குடி கீழக்கோட்டை நடுகோட்டை வடகரை மேலக்கோட்டை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் புதிய வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்:
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாகவும், ஊதியத்தை உயர்த்துவதாகவும் சொன்னார்கள். மாட்டுத்தாவணியில் உள்ள நக்கீரன் நுழைவு வாயிலை பாதுகாப்பில்லாத முறையில் அகற்றியதால் கள்ளிக்குடியை சேர்ந்த ஜே சி பி ஆபரேட்டர் உயிரிழந்தார். இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையே இல்லை தனது பிள்ளை மற்றும் குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமாக உள்ளது. மக்களுக்கு 100 நாள் வேலையில் சம்பளம் வரவில்லை, 150 நாள் ஆகும் என்று சொன்னீர்கள் முதல்வரே ஏன் செய்யவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை கொடுத்தாலும் அதற்கு முதல்வர் பதில் சொல்லவில்லை. பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லை. ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறை தமிழ்நாடு காவல்துறை என பெயர் பெற்ற தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் நாளை காலை அனைத்து குற்றவாளியும் கொண்டு வந்து நிறுத்துவார்கள் அவர்களால் முடியும். எங்கள் ஆட்சியின் போது தப்பு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம் ஆனால் இப்போது அப்படி இல்லை திமுக கொடி கட்டி போய் கற்பழிக்கின்ற கொடுமை நம் நாட்டில் பார்க்கிறோம் இந்த மாதிரி சூழ்நிலைக்கு மாற்றம் வேண்டும் நம்மை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் தமிழக வாக்காளர்கள் தக்க நேரத்தில் பாடத்தை புகட்டுவார்கள் என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக