உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம்

IMG-20250218-WA0419

 உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் உணவு பழக்கம் மற்றும் குழந்தைகள் உடல் மற்றும் மனநலம் என்கிற தலைப்பில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை தாங்கினார். 


பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் ரவி முன்னிலை வகித்தார். 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்கள் இப்பருவத்தில் உணவு அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். மாணவ பருவத்தில் பலரும் எடுத்துகொள்ளும் நொறுக்கு தீனிகள் மற்றும் சுவையூட்டிகள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்கின்றனர். இதனால் உப்பு மற்றும் கொழுப்பு தன்மை உடலில் அதிகரித்து சிறு வயதிலேயே அதிக கோபம் ஏற்படுத்தல், இரத்த அழுத்தம் அதிகரித்தல், சிறுநீரக பிரச்சனை, மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆட்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பிஸ்கட், சக்லெட்களில் சேர்க்கப்படும் சேர்மங்கள் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துவதுடன் நினைவு திறனையும் குறைகிறது. இவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். 


சிறுதானிய உணவுகள், பழங்கள் கீரைகள் உள்ளிட்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் 6 முதல் 10 வகுப்பு கல்வியில் படிப்பில் முழுமையான அர்ப்பணிப்புடன் படித்தால் மட்டுமே உயர் கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். ஆசிரியர்கள் வழிகாட்டலுடன் சரியான முறையில் கல்வியை கற்க வேண்டும் என்றார். 


ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது குழந்தை பருவத்தில் எடுத்து கொள்ளும் அக்கறையே வாழ்வில் உயர வழிகாட்டும். இப்பருவத்தில் நல்ல உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். நன்றாக விளையாட வேண்டும். நன்றாக உறங்க வேண்டும். இவை நான்கும் சரியான முறைபடி இருந்தால் உடல் மற்றும் மனம் சரியாக இருக்கும். மொபைல் மற்றும் சமூக ஊடகங்கள் அடிமை படுத்தும் சூழல் உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். 


தொடர்ந்து நிகழ்ச்சியில் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் மகாலட்சுமி, இந்திராணி, அனுராதா, கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் பேசினார் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad