உளுந்தூர்பேட்டை முக்கிய வீதிகளில் அதிமுக அம்மா பேரவையின் சார்பில் துண்டு பிரச்சாரம் மற்றும் திண்ணை பிரச்சாரம் நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுகவின் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு அவர்கள் தலைமையில் துண்டு பிரச்சாரம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கடந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்களை கூறி முக்கிய வீதிகளில் கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரச்சார நோட்டிஸ் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் உளுந்தூர்பேட்டை நகர கழக செயலாளர் துரை ஒன்றிய கழக செயலாளர்கள் மணிராஜ், அதையூர் சுப்பராயன், மற்றும் கழக நிர்வாகிகள் ராமசாமி, உத்தர குமார், நகைக் கடை சேகர், கோபால், 24 வார்டு செயலாளர்கள் 14 அணி செயலாளர்கள் வழக்கறிஞர் அணிகள் மாவட்ட,நகர, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக